ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் விஜய் பண்ண வேலை.. ஆரம்பமே இப்டி ஏழுரையா இருக்கே.. நடந்தது என்ன?

By Archana

Published on:

சினிமாவை தாண்டி அரசியலிலும் சிறிது சிறிதாக கால் பதிக்கத் தொடங்கி இருக்கிறார் விஜய். என்னதான் அதிகாரப்பூர்வமாக அவர் இதனை அறிவிக்கவில்லை என்றாலும், அவரது செயல்பாடுகள் அனைத்தும் விரைவில் அவர் அரசியலுக்கு வந்து விடுவார் என்பதையே காட்டுகிறது. உள்ளாட்சி, நகர்ப்புற தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பலர் வெற்றிபெற்ற நிலையில், அதன் பிறகு தான் அவரது அரசியல் பிரவேசம் விறுவிறுப்படைந்துள்ளது. அரசியல் தலைவர்களை சந்திப்பது, நிர்வாகிகளுடன் அவ்வப் போது பண்ணை வீட்டில் மீட்டிங் நடத்துவது என தொடங்கியவர், பின்னாளில் வெளிப்படையாக சில விஷயங்களை செய்யத் தொடங்கினார்.

217315 thumb 665

உதாரணத்திற்கு உலக பட்டினி தினத்தின் போது, அனைத்து மாவட்டங்களிலும் இலவச அன்னதானம் வழங்கியது, மாவட்டந்தோறும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நூலகம், பயிற்சி வகுப்புகள் தொடங்கியது என படிப்படியாக நல்ல விஷயங்கள் செய்வதில் கவனம் செலுத்தினார். அதனையும் தொடர்ந்து 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த தொகுதி வாரியான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியது மிகப்பெரிய பேசுப் பொருளாக மாறியது.

   
vijay padayatra polical entry sixteen nine

சமீபத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியது என அடுத்தடுத்த பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் பண்ணை வீட்டில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார் விஜய். எதிர்வரும் மக்களவை தேர்தலில் களம் இறங்கலாமா என்பது குறித்து அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

WhatsApp Image 2022 07 13 at 54254 PM

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் 20 ரூபாய் வெற்று பத்திரத்தில் விஜய் கையெழுத்துப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது சட்டவிரோத செயல் எனவும் கூறப்படுகிறது. எந்த ஒரு பதிவும் இன்றி வெற்று பத்திரத்தில் எப்படி ஒருவரிடம் இருந்து கையெழுத்து பெற முடியும்? எதற்காக அந்த கையெழுத்தினை பெற வேண்டும் என கேள்விகள் எழுந்துள்ளது.

author avatar
Archana