சேச்சி, சேட்டன்மார்களுக்கு.. வேன் மீது ஏறி மலையாளத்தில் பேசி அசத்திய தளபதி.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..

By Archana

Published on:

‘GOAT’ படப்பிடிப்புக்காக நேற்றைய தினம் நடிகர் விஜய் அவர்கள் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்துக்கு சென்றிருந்தார். இதனை அறிந்த தளபதி ரசிகர்கள் ஏர்போர்ட்டில் ஒன்றுகூடி விட்டனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய்க்காக அவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டது. மேலும், விஜய் அவர்கள் காரில் ஏறிச்செல்ல கூட வழி விடாமல் அவரின் காரை சுற்றிவளைத்த ரசிகர்கள் அந்த காரை சேதாரம் ஆக்கிவிட்டனர் அதுகுறித்து வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

அங்கு இரவில் தான் ஷூட்டிங் நடத்தப்படுவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளன. மேலும், விஜய் தங்கியிருக்கும் இடத்தில அவருடைய ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று தான் சொல்ல வேண்டும். தளபதி விஜயை காண ஏராளமான ரசிகர்கள் பல மணி நேரமாக காத்துக்கிடக்கின்றனர். விஜய்க்கு கேரளாவில் ஒரு பெரிய ரசிகர் வட்டம் உள்ளது என்பது தெரிந்த ஒன்று தான். ஆனால் இந்த கூட்டம் கேரளாவில் ஏதோ திருவிழா நடப்பது போல உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

   

இந்நிலையில் விஜய் அவர்கள் ஒரு வேனின் மீது ஏறி கையில் மைக் பிடித்துக்கொண்டு கேரளா ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் தெரிவித்திருக்கிறார், அதுவும் மலையாள மொழியில் ஒரு சில விஷியங்களை பேசியுள்ளார் நடிகர் விஜய். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author avatar
Archana