தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். சமீப காலமாக காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சதீஷ் பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சேலத்தில் பிறந்து வளர்ந்த சதீஷ், கிரேசி மோகன் உடன் இணைந்து பல மேடைகளில் காமெடியனாக நடித்திருக்கிறார்.
பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர் முதல் படமே சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல். பின்னர் பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கும் சதீஷ், ‘நாய் சேகர்’ என்ற படத்தில் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘வித்தைக்காரன்’ என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
நடிகர் சதீஷ் நடித்துள்ள வித்தைக்காரன் திரைப்படக் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், நடிகர்கள் சதீஷ், மதுசூதனன், நடிகை சிம்ரன் குப்தா, இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சதீஷ், வித்தைக்காரன் திரைப்படத்தின் மூலம் சீரியஸ் கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார்.
View this post on Instagram
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சதீஷ் ‘ விஜய் சார் ரசிகர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பார் என்று நிறைய முறை சொல்லியிருக்கிறேன். கத்தி பட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, இயக்குநர் வெங்கி அவரது தீவிர ரசிகன் என்று விஜய் சாரிடம் சொல்லியிருக்கிறேன். அவருக்கு பிறந்தநாள் என்றதும் வீடியோ மூலம் விஜய் சார் வாழ்த்து தெரிவித்தார். என அந்த வீடியோவையும் மேடையில் போட்டு காண்பித்தார். மேலும் அவர் விஜய் சார் கட்சி தொடங்கி இருக்கிறார். அதிலும் மிகப்பெரிய வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார். இதோ அந்த வைரல் வீடியோ…