#image_title
தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் ஒரு நாளில் ரிலீஸானால் அன்று வேறு எந்த படமும் ரிலீஸாகாது என்கிற நிலைமையே உள்ளது. அனைத்துத் தியேட்டர்களிலும் நமது படம்தான் ஓடவேண்டும் என நடிகர்களும் தயாரிப்பாளர்களும் விரும்புகின்றனர்.
ஆனால் சிலப் பத்தாண்டுகளுக்கு முன்னர் அப்படி ஒரு சூழல் இல்லை. அப்போதெல்லாம் பண்டிகை நாட்களில் தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் ரிலீஸாகும். அவரவர் மார்க்கெட்டுக்கு ஏற்ப தியேட்டர் எண்ணிக்கைக் கொடுக்கப்படும். அப்படி ஒரே நாளில் ரிலீஸான படங்கள் வெற்றி பெற்று வசூலையும் குவித்துள்ளன.
அப்படி 1991 ஆம் ஆண்டு ஒரே நாளில் ரிலீஸான இரண்டு கல்ட் கிளாசிக் படங்களைப் பற்றிதான் இந்தபதிவில் நாம் பார்க்கப் போகிறோம். 1991 ஆம் ஆண்டு தீபாவளிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதியும் குணாவும் ரிலீஸாகின.
முதல்முறையாக ரஜினிகாந்த் –மணிரத்னம் கூட்டணியில் உருவான படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ‘தளபதி’ படத்துக்குதான் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் அந்த படத்துக்குதான் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. ரஜினியின் கேரியரில் இல்லாத அளவுக்கு ஓப்பனிங் கிடைத்தது.
ஆனால் மறுபுறம் குணா படத்துக்கு நேர்ந்ததோ காவியத்துயரம்தான். இந்த படம் இன்று ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டாலும் ரிலீஸான சமயத்தில் படுதோல்வியை சந்தித்தது. சில வாரங்களிலேயே தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டது.
#image_title
இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான Tie me up Tie me down என்ற படத்தின் தழுவலில் உருவானது. இந்த படம் தோல்வி அடைந்தாலும் படத்தின் பாடல்கள் பெரியளவில் ஹிட்டாகின. சமீபத்தில் ரிலீஸாகி பெரிய வெற்றி பெற்ற மஞ்சும்மள் பாய்ஸ் படத்தின் வெற்றிக்கு இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘கண்மணி அன்போடு காதலன் எழுதிய கடிதமே’ பாடலை பொருத்தமான இடத்தில் பயன்படுத்தி இருந்ததும் ஒரு காரணமாக அமைந்தது.
ஆனால் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த தளபதி படமும் பிளாக்பஸ்டர் ஹிட் என்று சொல்ல முடியாது. தொடக்க நாட்களுக்குப் பிறகு அந்த படத்தின் வசூலும் கணிசமாகக் குறைந்ததாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் தளபதி வழக்கமான ரஜினி படம் போல இல்லாமல் இருந்ததுதான். ரஜினியைக் கட்டிவைத்து போலீஸ் ஸ்டேஷனில் அடிக்கும் காட்சியெல்லாம் ரஜினி ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போனதாம்.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…