தளபதி 69 விஜயின் கடைசி படம் இல்ல… தளபதி 70 இருக்கு… அதுவும் எந்த இயக்குனர் கூட தெரியுமா….?

By admin on தை 19, 2025

Spread the love

விஜய் தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகர் மற்றும் புகழ் பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனர். அதன் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய்.

   

அதற்குப் பிறகு தனது 18 வது வயதில் 1990களில் நாயகனாக அறிமுகமானார் விஜய். குடும்ப கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2000 கால கட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார் விஜய். 2010 கால கட்டத்திற்கு பிறகு விஜய் நடித்த படங்கள் வெளிவந்தாலே ஹிட்டுதான் வசூல் சாதனை படைக்கும் என்ற அளவு புகழின் ச்சியில் இருந்தார்.

   

என்னதான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அரசியலில் களமிறங்க போவதாக அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பணிகளை செய்து வருகிறார் விஜய். அரசியலில் முழு நேரமாக இறங்குவதற்கு முன்பாக இறுதியாக தளபதி 69 என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறப் போகிறார் என்று செய்திகள் வெளியாயி.

 

இந்நிலையில் இன்று புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் தளபதி 69 அவரது இறுதி படம் இல்லை தளபதி 70 படத்தில் நடிக்க வேண்டும் என்று இருக்கிறாராம் விஜய். அதற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் ஸ்கிரிப்ட் எழுத சொல்லியிருக்கிறாராம். அப்படி தளபதி 70 என்ற படம் வந்ததால் அது வெங்கட் பிரபுவின் படமாக தான் இருக்கும் என்று செய்திகள் சினிமா வட்டாரங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.