ஒரு வழியாக தளபதி 69 படத்தின் இயக்குனர் Confirm.! விஜய் கடைசி படத்தை இயக்கப் போவது இவர்தானா.?

By Ranjith Kumar

Published on:

ஒரு வழியாக தளபதி 69 படத்தை யார் இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது: தளபதி விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், வி.டி.வி கணேஷ், சினேகா, லைலா, பார்வதி நாயர், மைக் மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபோ, அரவிந்த் ஆகாஷ், அஜய்ராஜ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தின் கோர்ட் என்ற டைட்டிலை விஜயின் பிறந்தநாள் அன்று வெளியிட்டு இருந்தார்கள்.

இப்படத்தின் இசையமைப்பாளர் “யுவன் சங்கர் ராஜா”  அவர்கள் இன்னிசையில் இன்னும் சில நாட்களில் ஃபர்ஸ்ட் டிராக் என்னும் பாடல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படம் வரும் மார்ச் கடைசி வாரத்தில் முடிவடைந்து ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக இப்பட குழு அறிவித்து இருக்கிறார்கள். தளபதி விஜய் அவர்கள் தலைவர் விஜையாக மாற உள்ளேன் என்று தற்போது பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டு தான் அரசியலில் முழு நேர அரசியல்வாதியாக போகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

   

இவர் நடிக்கும் 68 வது கோட் படமும் மற்றும் 69 வது படம் படத்தையும் முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக ஆவேன் என்று தெரிவித்திருந்தார். தற்போது அதிலிருந்து 69 பட இயக்குனர் யார் என்று பலரும் ஆர்வத்துடன் கேட்டு வந்து கொண்டிருந்தார்கள். அந்த இயக்குனர் வரிசையில் வெங்கட் பிரபு, வெற்றிமாறன், நெல்சன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் என்று பலரும் இருந்தார்கள்.

ஆனால் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, சதுரங்க வேட்டை, வலிமை, துணிவு போன்ற மாபெரும் படங்களை எடுத்து ஹிட் கொடுத்த இயக்குனர் எச். வினோத் அவர்கள் தான் தளபதி 69 வது படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. டி.வி.டி என்டர்டைன்மென்ட் இப்படத்தை தயாரிக்க உள்ளதாம். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் ஒன்று இரண்டு நாட்களில் வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

author avatar
Ranjith Kumar