தமிழ் சினிமாவில் உட்சபட்ச இன்னும் சொல்லப் போனால் நம்பர் ஒன் இடத்தில் இருக்கக் கூடிய நடிகர் விஜய் தான். வசூல் மன்னனாகத் திகழ்ந்து வரும் விஜய், நடிப்பை விடுத்து அரசியலில் அவர் நுழைய இருப்பதாக அறிவித்துள்ளதால், அவரது இறுதிப் படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. தன்னுடைய ஒரு படம் முடிந்து திரையில் வருஅதற்கு முன்பே, அடுத்தப் படத்தின் சூட்டிங்கில் இறங்கி விடுவார் விஜய்.

#image_title
தற்போது தன்னுடைய 68-வது படத்தை வெங்கட்பிரபு இயக்கத்தில், கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தை முடித்து, அடுத்து ஒப்பந்தமாகியுள்ள படத்திலும் நடித்து முடித்து பின் முழு நேரம் அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் அந்த படத்தை யார் இயக்க இருக்கிறார் என்பது தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த ரேசில் முதலில் வெற்றிமாறன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருந்தனர்.
குறிப்பாக கார்த்திக் சுப்புராஜ் தான் இறுதியாக விஜய் 69வது படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதேப் போல் தயாரிப்பு நிறுவனம் யார் என்பதிலும் போட்டி நிலவுகிறது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே கொடுத்த வாக்குப் படி, அந்நிறுவனத்தில் 100-வது படத்தில் விஜய் தான் நடிக்க இருப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிடிவி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் விஜய்யின் 69-வது படம் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

#image_title
இப்படத்திற்காக விஜய்க்கு மட்டும் 220கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், இயக்குநர் லிஸ்ட்டில் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் உடன் இயக்குநர் ஹெச்.வினோத்தும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஹெச்.வினோத் தான் விஜய்யின் 69-வது படத்தை இயக்கப் போகிறார் என பல சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதேப் போல இந்தப் படத்திற்கு சிறுத்தை எனத் தொடங்குமாறோ, அல்லது முடியுமாறோ தலைப்பு வைக்க வேண்டும் என விஜய்யே கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ANGRY CHEETAH என தலைப்பு வைக்கப்படலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

#image_title