Connect with us

BOSS-ம் இல்ல… BUZZLE -ம் இல்ல… ‘தளபதி 68’ பட டைட்டில் இதுதான்…  மாஸாக வெளிவந்த சூப்பர் அப்டேட்…

CINEMA

BOSS-ம் இல்ல… BUZZLE -ம் இல்ல… ‘தளபதி 68’ பட டைட்டில் இதுதான்…  மாஸாக வெளிவந்த சூப்பர் அப்டேட்…

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.

   

அதன்படி நடிகர் விஜய் இத்திரைப்படத்தில் 19 வயது வேடத்திலும் நடிக்க உள்ளாராம். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தென்னாபிரிக்கா, தாய்லாந்து, சென்னை என இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு சமீபத்தில் தளபதி 68 ஷூட்டிங் துருக்கியில் நடைபெற்றது. ‘ தளபதி 68’ படத்தின் தலைப்பு First லுக் உடன் வருகிற புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் தளபதி 68 படத்திற்கு ‘பாஸ்’ என்ற டைட்டிலை வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், இந்த டைட்டில் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் எனவும் இணையத்தில் தகவல்கள் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.

இதுகுறித்து அர்ச்சனா கல்பாத்தி தனது  X தள பக்கத்தில் விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில் தளபதி 68 படத்தின் தலைப்பு G.O.A.T என கூறி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பொருள் G.O.A.T = Greatest Of All Time என்பதே ஆகும். தற்போது சமூக வலைத்தளத்தில் G.O.A.T எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.இதனை தளபதி ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி வந்தாலும், ஒருசிலரோ தமிழ்நாட்டுக்கு தளபதின்னு சொல்லிட்டு வைக்கிறது எல்லாம் இங்கிலிஷ் பட டைட்டிலா என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

Continue Reading
To Top