தளபதி 68 படத்தில் இப்படி ஒரு சர்ப்ரைஸா?.. செம மாஸா இருக்க போகுது.. விஜய் ரசிகர்களுக்கு செம குஷியான அப்டேட்..!!

By Nanthini on ஆவணி 18, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. லியோ திரைப்படத்தில் அர்ஜுன், கௌதம் மேனன் மற்றும் திரிஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய் தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஆக்சன் என்டர்டெயின்மென்ட் ஜெனரில் உருவாக உள்ள இந்த படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

   

 

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள விஜய் நாடு திரும்பிய பிறகு தளபதி 68 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே விஜய் படங்களில் ஒரு கேரக்டர் இருந்தாலே மாஸ் கிளப்பும்.

தற்போது  இரட்டை வேடங்களில் விஜய் நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களுக்கு இனிப்பு கோலா ஐஸ் சாப்பிட்டதை போல குளிர்ச்சியாக உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு மற்றும் ஷூட்டிங் தொடக்கம் ஆகியவற்றிற்காக அடுத்தடுத்த அப்டேட்டுகளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.