Connect with us

லியோ ரிலீஸ் ஆகி 4 நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள தளபதி 68 பட தயாரிப்பாளர் பதிவிட்ட தகவல்… லியோ மார்கெட் சரியுமோ..?

CINEMA

லியோ ரிலீஸ் ஆகி 4 நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள தளபதி 68 பட தயாரிப்பாளர் பதிவிட்ட தகவல்… லியோ மார்கெட் சரியுமோ..?

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த 19- ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் லியோ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி ஒரு வாரம் வரை பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆனது.

   

லியோ படம் பொன்னியின் செல்வன், ஜெய்லர் உள்ளிட்ட படங்களின் சாதனை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோ படத்தின் ட்ரெய்டிலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த லியோ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள படத்திற்கு தளபதி 68 எனது தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முதலில் பாடல் காட்சிகளுடன் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. அந்த பாடலுக்கு விஜய், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடனம் ஆடியுள்ளனர்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தர் கோரியோகிராப் செய்துள்ளார். இந்த படத்தில் டபுள் ஆக்ஷனில் விஜய் நடிக்கிறார் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தது. அவருக்கு சினேகாவும், மீனாட்சி சவுத்ரியும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜெயராம், லைலா, பிரியங்கா மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். லியோ படத்தை விட தளபதி 68 படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 68 படத்தின் தயாரிப்பாளர் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளர்.

தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ மற்றும் படம் குறித்த பிற அப்டேட்டுகள் இன்று வெளியாகும் என குறிப்பிடுள்ளார். லியோ படம் ரிலீஸ் ஆகி 4 ஆட்களே ஆன நிலையில் தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியானால் லியோ படத்தின் மார்கெட் சரிய வாய்ப்பு உள்ளது.

author avatar
Priya Ram
Continue Reading
To Top