Connect with us

நாடு நாடா சென்று சண்டைக்காட்சி…. “முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமா தான் இருக்கும் போலையே”…. தளபதி 68க்கு எகிரும் எதிர்பார்ப்பு…!!!

CINEMA

நாடு நாடா சென்று சண்டைக்காட்சி…. “முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமா தான் இருக்கும் போலையே”…. தளபதி 68க்கு எகிரும் எதிர்பார்ப்பு…!!!

 

தளபதி விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பெரும்பாலான ரசிகர்கள் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும் ஒரு சிலர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் படம் வசூல் வேட்டை செய்து வருகின்றது. இதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கின்றார்.

   

விஜய் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியானது. அதாவது பொங்கலை முன்னிட்டு வாரிசு திரைப்படம். அதைத்தொடர்ந்து தற்போது லியோ திரைப்படம் வெளியாகி உள்ளது. லோகேஷ் இயக்கிய இந்த திரைப்படம் எல்சியூ படமாக வெளியானதால் முதல் நாள் சூப்பரான ஓப்பனிங் கிடைத்தது. பாக்ஸ் ஆபிஸிலும் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. லியோ படத்தை நெட்டிசன்கள் பலர் ட்ரோல் செய்து வெளியிட்டாலும் விஜய் ரசிகர்கள் படம் பிளாக் பாஸ்டர் என்று ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படத்திலே இந்த திரைப்படம் தான் சற்று சுமாரான திரைப்படம் என பலரும் கூறி வருகிறார்கள்.  இதற்கு இடையில் விஜய் தனது அடுத்த படமான தளபதி 68 திரைப்படத்தின் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜையை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

பூஜை நடந்த சில நாட்களிலேயே ஒரு பாடல் காட்சியையும் ஒரு சண்டைக் காட்சியையும் முடித்துவிட்டார் வெங்கட் பிரபு. இந்த திரைப்படத்தில் விஜயுடன் சேர்ந்து சினேகா, அரவிந்த்சாமி, பிரசாந்த், மைக் மோகன், வைபவ், ஜெய், பிரபுதேவா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் மொத்தம் ஏழு சண்டை காட்சிகள் இருப்பதாகவும் இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் தற்போது சண்டை காட்சிகளை எடுக்க பட குழுவினர் முதலில் தென்னாப்பிரிக்கா அதன் பிறகு இஸ்தான்புல் சென்று சண்டைக்காட்சியை படமாக்க இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் படம் முழுவதும் சண்டைக்காட்சி தான் இருக்கும் போல என்று கூறி வருகிறார்கள். லியோ பரபரப்பு இப்போதுதான் முடிந்த நிலையில் அடுத்த தளபதி 68 கான செய்தி வெளியாகியிருப்பது ரசிகர்களை மேலும் குஷி படுத்தியுள்ளது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top