Connect with us

அதிரடியாக தாய்லாந்தில் களமிறங்கிய ‘தளபதி 68’ படக்குழு… எங்க தளபதிய காணோம்…? வெளியான புகைப்படங்கள்…

CINEMA

அதிரடியாக தாய்லாந்தில் களமிறங்கிய ‘தளபதி 68’ படக்குழு… எங்க தளபதிய காணோம்…? வெளியான புகைப்படங்கள்…

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலில் சக்க போடும் போட்டு வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் 148.5 கோடி வசூலித்து இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியது. இதைத்தொடர்ந்து தற்பொழுது வரை வசூலில் சக்க போடும் போட்டு வருகிறது.

   

இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

லியோ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ‘தளபதி 68’ அப்டேட்களை படக்குழு வெளியிடாமல் இருந்தது.  இதைத்தொடர்ந்து சமீபத்தில் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை சென்னையில் பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்று முடிந்தது. இந்த பூஜை வீடியோவை இயக்குனர் வெங்கடேஷ் பிரபு தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளுக்கு சென்று படக்குழு படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும்,  அதன்படி தற்பொழுது ‘தளபதி 68′ படக்குழு தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளது. அங்கு ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர, அதில் ஒருவரின் முகம் மட்டும் மறைக்கப்பட்டுள்ளது. எங்க எங்களோட தளபதிய காணோம்’ என கேள்வி எழுப்பி  வருகின்றனர்.

Continue Reading
To Top