தலைவர் 171-ஏ இன்னும் ஆரம்பிக்கல! அதுக்குள்ள தலைவர் 173 அப்டேட்டா? அடடா

By Arun on சித்திரை 17, 2024

Spread the love

ரஜினிகாந்த் தற்போது தா.செ.ஞானவேல் இயக்கி வரும் “வேட்டையன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர், பகத் பாசில், அமிதாப் பச்சன், துசாரா விஜயன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

   

“வேட்டையன்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 171 ஆவது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணையவுள்ளார். இத்திரைப்படம் “The Purge” என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

   

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் 173 திரைப்படம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இத்திரைப்படத்தை யார் இயக்கப்போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.

 

“தலைவர் 171” திரைப்படத்தை தொடர்ந்து “தலைவர் 172” திரைப்படம் “ஜெயிலர் பார்ட் 2” ஆக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. “தலைவர் 172” திரைப்படத்தை தொடர்ந்து “தலைவர் 173” திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளிவருகிறது. அதே போல் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் ஒரு திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஓய்வே இல்லாமல் ரஜினிகாந்த் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறாராம்.