தலைவர் 171-வது படம் இந்த ஹாலிவுட் படத்தோட காப்பியா..? இது என்னடா லோகேஷால் ரஜினிக்கு வந்த சோதனை..!!

By Priya Ram

Published on:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

   

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தலைவர் 171 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த படத்தில் பகத் பாஸில், அமிதாபச்சன், மஞ்சு வாரியர் உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர். தலைவர் 171 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற வாட்ச் பற்றி தான் அனைவரும் பேசுகின்றனர்.

இந்த நிலையில் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. கைதி, மாநகரம் திரைப்படம் போல தலைவர் 171 வது படமும் ஒரே நாளில் நடக்கும் கதை என கூறப்படுகிறது. மேலும் இந்த படம் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான The purge என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுப்பதாகவும் கூறப்படுகிறது.

author avatar
Priya Ram