#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. 73 வயதிலும் ஹீரோவாக நடித்து ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வசூலில் சாதனையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ‘தலைவர் 170’, ‘தலைவர் 171’ என இரண்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.
தலைவர் 170 திரைப்படத்தின் டைட்டில் கூட அவரது பிறந்த நாளன்று மாஸாக வெளியிடப்பட்டது. ‘வேட்டையன்’ திரைப்படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டீசரில் ரஜினி தன் கையில் லத்தியுடன் ‘குறி வைச்சா இரை விழணும்’ என்ற பஞ்ச் டயலாக்கை மாஸாக பேசியிருப்பார். இந்த டயலாக்கை பேசும் பொழுது அவர் தனது கையில் இருந்த ஐ கிளாசை தூக்கி எறியும் பொழுது, அது அவர் கண்ணில் தானாகவே சென்று ஒட்டிக் கொள்ளும்.
இதை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இது கிராபிக்ஸ் ஆகத்தான் இருக்கும் என்று கூறி வந்தனர். ஆனால் உண்மை என்னவென்றால் இது கிராபிக்ஸ் கிடையாது. அது ஒரு வகையான மேக்னடிக் கிளிப் ஆன் கிளாசஸ் வகையை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த கண்ணாடி பிரேம் மற்றும் கிளாஸ் இரண்டிலுமே மேக்னெட் கொடுத்திருப்பார்களாம்.
இதனால் பிரேம் மட்டும் போட்டுக்கொண்டு கிளாசை தூக்கிப் போட்டால் தானாக அது ஒட்டிக் கொள்ளுமாம். மேலும் இந்த கண்ணாடியின் விலை குறித்த தகவல்களும் தற்போது இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. இதனுடைய விலை ரூ.3000 என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இதை வைத்துக்கொண்டு பயங்கர அலப்பறை செய்து கொண்டு வீடியோ வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகின்றனர்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…