Categories: சினிமா

‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’… ரசிகர்களை பாத்து தம்ஸ் அப் காட்டிய கேப்டன் விஜயகாந்த்.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாததால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.  மருத்துவமனை அவரது உடல்நிலை சீராக இல்லை என அறிக்கை வெளியிட்டதும் ரசிகர்கள் பதறிப்போயினர். இதைத்தொடர்ந்து பல்வேறு வதந்திகளும் பரப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடிகர் விஜயகாந்தின் மனைவி  பிரேமலதா வீடியோ வெளியிட்டு  ‘கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம். விரைவில் வீடு திரும்பி விடுவோம்’ என்று மருத்துவமனையில் விஜயகாந்த் உடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக மருத்துவமனையும் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று தேமுதிக-வின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னையில் விஜயகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகர் விஜயகாந்த் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு விஜயகாந்த் அவர்களை வீல் சேரில் வைத்து அழைத்து வரப்பட்டதை பார்த்த  பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு கலங்கிஅழுதனர். இதை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த கட்சி நிர்வாகிகளை நோக்கி தம்ஸ் அப் காட்டி உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

9 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

9 மணத்தியாலங்கள் ago