#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்தவர் ரா. சங்கரன். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும், தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். 1974 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு. என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் கால் பதித்தார்.
இதை தொடர்ந்து தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, ஒருவனுக்கு ஒருத்தி, தூண்டில், பெருமைக்குரியவள் போன்ற பல ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதோடு மட்டுமின்றி இவர் நடிகராக ‘ஆடிப்பெருக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினர்.
இதை தொடர்ந்து ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, காதல் கோட்டை என பல திரைப்படங்களில் நடிகராக நடித்து அசத்தியுள்ளார். முக்கியமாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் படத்தில் ரேவதி அப்பாவாக சந்திரமௌலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் அவர் தனது அழுத்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் 92 வயதாகும் பழம்பெறும் இயக்குனரும் நடிகருமான ரா. சங்கரன் அவர்கள் இன்று காலை மரணம் அடைந்துள்ளார். வயது முதுமையின் காரணமாக மரணம் அடைந்த அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பீகார் மாநிலம் ஆரா பகுதியில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ராஜு யாதவ் என்ற நில வியாபாரியை, மோட்டார் சைக்கிளில் வந்த…
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டம் குமார்கண்டு ஒன்றிய பகுதியில், இரவு நேரத்தில் தன் காதலியைச் சந்திக்கச் சென்ற வாலிபரை அப்பகுதி…
ராய்ப்பூர் டீடீ நகர் பகுதியில் வீட்டின் வெளியே தனது குழந்தையைக் கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த நபர் மீது, அப்பகுதியில்…
டெஹ்ராடூனின் விஜய் காலனியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண், புதன்கிழமை அன்று நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்த…
அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…