Categories: சினிமா

ஜோதிகா போட்ட மாஸ்டர் பிளான்.. 500 கோடி பட்ஜெட்டை அசால்ட்டாக தட்டி தூக்கிய நடிகர் சூர்யா..

Spread the love

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவருக்கு துவக்கத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. நடிகர் சிவக்குமார் பையன் நடித்த படம் என்பது மட்டுமே முகவரியாக இருந்தது. அமீர் இயக்கத்தில் அவர் நடித்த மௌனம் பேசியதே படத்தில் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். நந்தா படம் அவரை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது. கஜினி அவரை முன்னணி நடிகராக உயர்த்தியது. பிறகு வேல், சிங்கம் போன்ற படங்கள் டாப் ஸ்டார்களில் ஒருவராக மாற்றியது.

#image_title

சமீபமாக சூர்யா படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள கங்குவா படம் ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சுதா கொங்காரா இயக்கும் ஒரு படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். இந்த சூழலில் இந்தியில் ஒரு முக்கிய படத்தில் நடிக்க சூர்யா கமிட் ஆகி இருக்கிறார். ஏற்கனவே மும்பையில் சூர்யா குடும்பத்துடன் செட்டிலான நிலையில், பிரபல இந்தி பட இயக்குநர் ஓம் பிரகாஷ் இயக்கத்தில், மகாபாரதம் கதையில் வரும் கர்ணன் கேரக்டரை மையப்படுத்திய ஒரு படத்தில் அந்த கர்ணன் கேரக்டரில் நடிக்க சூர்யா ஒப்பந்தம் செய்யபட்டு, அக்ரிமென்ட் போடப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

#image_title

எக்ஸலண்ட் டைமண்ட் என்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்தியில் எடுக்கப்படும் இந்த படம் மற்ற மொழிகளில் டப் செய்யப்படலாம், அல்லது ஒரே கட்டத்தில் பிறமொழிகளிலும் எடுக்கப்பட்டலாம். இந்த படத்தின் முதல்கட்ட பட்ஜெட் 500 கோடி ரூபாய். தேவைப்பட்டால் இன்னும் சில நூறு கோடிகள் ஒதுக்கவும் பட நிறுவனம் தயாராக உள்ளது. இந்த படத்தின் வாய்ப்பை சூர்யாவுக்கு பெற்றுத் தந்தவர் அவரது மனைவி ஜோதிகாதான். அவர் ஏற்கனவே நிறைய இந்தி படங்களில் நடித்திருக்கிறார், இந்தியில் சினிமா துறையினருடன் பல காலமாக தொடர்பில் இருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜோதிகாவின் நீண்டகால நண்பர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆங்கில படம் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தி படவுலகில் முதல் முறையாக காலடி பதிக்கிறார் நடிகர் சூர்யா. அதுவும் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் அவர் நடிக்கும் முதல் படமும் இதுதான்.

admin

Recent Posts

“விஜய்ய ஆள விடுங்க..6 மாசம் டைம்”… விஜய்யை முதலமைச்சராக்க பாஜக போடும் மாஸ்டர் பிளான்… அமித்ஷாவிற்கு அனுப்பப்படும் அந்த ரகசிய கடிதம்…!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின்…

3 minutes ago

தவெக – அதிமுக கூட்டணி… இரவோடு இரவாக உறுதி செய்தார்… அரசியலில் அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவளிப்பது குறித்து எடப்பாடி…

8 minutes ago

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

10 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

10 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

10 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

10 மணத்தியாலங்கள் ago