Thaikilavi

முதல் நாளில் வசூலை அள்ளிய வசூல் தாய்கிழவி… அடேங்கப்பா என அசந்து போன ரசிகர்கள்!

By Elango on மாசி 28, 2026

Spread the love

அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவான படம் தாய்கிழவி. இந்த படத்தில் பவுனுத்தாயி என்ற மூதாட்டி கேரக்டரில் ராதிகா சரத்குமார் மிக சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார் இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தாய்கிழவி படத்தில் அருள்தாஸ் முனீஸ்காந்த் ஜார்ஜ் மரியம் பால சரவணன் சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

தாய்கிழவி படம் வெளியாவதற்கு முன்பே செலிபரட்டிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில் படம் நேற்று வெளியானது. முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் 2.50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 10 கோடி ரூபாய் என்று சொல்லப்படும் நிலையில் முதல் நாளிலேயே 2.5 கோடி ரூபாய் வசூலித்திருப்பது படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது.