தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் தாடி பாலாஜி நெல்லையில் செய்தியாளர்களில் சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது. அவர் மன உளைச்சலில் உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விஜய் பேசினால் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். விரைவில் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து சம்பவம் தொடர்பான பல முறைக்கப்பட்ட உண்மைகளை கூறுவார் என்று நான் நம்புகிறேன். தலைமைக்கும் தலைவருக்கும் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பவர்களை பதவிகளுக்கு வரவேண்டும். பதவியைப் பெற்றுக் கொண்டு செயல்படாமல் இருக்கக் கூடாது. மக்களுக்கு உண்மையாக உழைக்க வேண்டும் என தாடி பாலாஜி கூறியுள்ளார்.
