வெடித்தது மோதல்..! “உடனே மன்னிப்பு கேளுங்க” நாயோடு ஒப்பிட்டு பேசுவதா.? நடிகர் ராகவா லாரன்ஸை நேருக்கு நேர் சாடிய தாடி பாலாஜி..!!!

By Soundarya on ஆனி 15, 2026

Spread the love

மக்களை நாயோடு ஒப்பிட்டுப் பேசியதாக எழுந்த சர்ச்சைக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என நடிகர் தாடி பாலாஜி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், லாரன்ஸின் இந்த கருத்து அவரது சொந்த ஆதரவாளர்களுக்கே பெரும் மன கஷ்டத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலுக்கு வருவது என முடிவு எடுத்த பிறகு வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் தாடி பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். பொதுவெளியிலும் அரசியல் மேடைகளிலும் பேசும்போது பொறுப்புணர்வு அவசியம் என்பதைக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் லாரன்ஸ் தனது தவறை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தனது வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.