நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் குறித்த வழக்கை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்று விட்டது. மேலும் படத்தை மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்பிவிட்டதாகவும் ஒரு உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. அதனால் விரைவில் தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில் வருகிற 19 அல்லது 20ம் தேதி ஜனநாயகன் படம் அதிரடியாக ரிலீஸ் செய்யப்படும் ஒரு சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில் வருகிற 20ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த தாய்கிழவி படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை 19 அல்லது 20ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் உறுதியாகும் பட்சத்தில் தாய்கிழவி படம் ரிலீஸ் கண்டிப்பாக சில வாரங்கள் தள்ளிப் போகும். ஏனெனில் ஏற்கனவே பாரசக்தி படம் ஜனநாயகன் படத்துடன் மோதுவதாக பஞ்சாயத்து ஏற்பட்ட நிலையில் இந்த முறை தாய்கிழவி படத்தை கண்டிப்பாக எஸ்கே தள்ளி வைப்பார் என்று கூறப்படுகிறது.
