தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…. அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

By Nanthini on மார்கழி 4, 2025

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மாறச்சந்திரத்தை சேர்ந்த ஹரிஷ் (32) என்பவர் அதிமுக பிரமுகராக உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் ஓசூர் பஸ்தியை சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். பிரசாந்த் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை தலைவராக உள்ளார். ஹரிஷ் கார் டிரைவராக மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் தொழிலிலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகின்றார்.

இதனிடையே ஹரிசுக்கும் ஓசூர் வானவில் நபரை சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் அந்தப் பெண் கணவரை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பெண் கடந்த பிப்ரவரி மாதம் தன்னை ஹரிஷ் தொந்தரவு செய்வதாக போலீசில் புகார் அளித்தார். சென்னை போலீசார் விசாரித்த நிலையில் மீண்டும் அதே பெண்ணுடன் ஹரிஷ் தொடர்பில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற ஹரிஷ் அங்கேயே சாப்பிட்டார்.

   

பிறகு அங்கிருந்து ஸ்கூட்டரில் வானவில் நகர் அண்ணாமலை நகர இடையே சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மகும்பல் மாருதி நகர் பகுதியில் அவரை வழிமறித்து அறிவாளால் வெட்ட முயன்றனர். இதில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த ஹரிஷ் உயிர் பிழைக்க தப்பி ஓடினார். அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் கை மற்றும் தலை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ஹரிஷ் சம்பா இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

   

நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடை பயிற்சி சென்றபோது ஹரிஷ் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என்று வழக்கு பதிவு செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர்.