பழனி முருகனுக்கே மொட்டையா?… திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர்… பழனி கோயில் நில விவகாரத்தில் ஆளுங்கட்சி அமைச்சரின் மாஸ் ஸ்டேட்மெண்ட்… முதல்வர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு…!

Spread the love

பழனி அடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் மீட்கப்பட்டு, பக்தர்களின் வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த 1.40 ஏக்கர் நிலம், நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஜூலை 6-ஆம் தேதி, பழனி இணைச் சார்பதிவாளர் பணி மாறுதலான அந்த ஒருநாள் இடைவெளியைத் தந்திரமாகப் பயன்படுத்தி இந்த இமாலய மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும், நிலப் பதிவு முடிந்த அடுத்த நொடியே சம்பந்தப்பட்ட அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தி.மு.க ஐ.டி விங் தவெக அரசு மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், இத்துறையில் தவறு நடந்துள்ளதை ஓப்பந்தமாக ஒப்புக்கொண்டுள்ளார். “சார்பதிவாளர் தவறு செய்தது தெரிந்ததால்தான் அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை அடிப்படையாக வைத்து வாய்மொழியாகப் பத்திரப்பதிவு செய்ததாக அவர் கூறினாலும், அந்த ஆவணம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார். மேலும், இந்த முறைகேட்டில் சார்பதிவாளருக்குப் பின்னால் இருக்கும் அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் யார் என்று கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்று மேல்விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மறுபுறம், இந்த நில மோசடியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உறவினருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ரமேஷ் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது உறவினர் பெயரில் பழனி அடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் அவதூறானவை என்று அவர் எச்சரித்துள்ளார். தவெக அரசு பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் எழுந்துள்ள இந்த பிரம்மாண்ட நில விவகாரம், அரசியல் வட்டாரத்திலும் ஆன்மீக பக்தர்கள் மத்தியிலும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Visaka

Recent Posts

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

3 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

6 minutes ago

“என் கண் முன்னாடியேவா?!”… மகளின் வீட்டில் நடந்ததை பார்த்து கொந்தளித்த தந்தை… நொடியில் முடிந்த 24 வயது இளைஞரின் உயிர்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

17 minutes ago

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

27 minutes ago

ஐயோ கடவுளே… ஒரு செகண்ட்ல எல்லாம் போச்சே… காதலன் கண்முன்னே ஏழாவது மாடியிலிருந்து… கீழே விழுந்த இரண்டு குழந்தைகளின் தாய்… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…

45 minutes ago

அதிர்ச்சி… பட்டப்பகலில் அரங்கேறிய குண்டாந்தடி தாக்குதல்… நீதியை மூடி மறைக்கிறதா காவல்துறை?… ஆக்ராவை உலுக்கும் அரசியல் அராஜகம்…!

ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…

1 மணத்தியாலம் ago