தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட 5 படங்கள்.. தனுஷுக்கு திருப்புமுனையாக அமைந்த “யாரடி நீ மோஹினி”..

By Deepika

Published on:

இப்போது பான் இந்தியா என்ற கான்செப்ட் வந்துவிட்டது, அதாவது பல மொழி நடிகர்களை முக்கியமான கதாபாத்திரத்தில் ஒரே படத்தில் நடிக்க வைத்து ஒரே நேரத்தில் அணைத்து மொழிகளிலும் வெளியிடுவது. உதாரணத்திற்கு பாகுபலியை எடுத்துக்கொள்வோம், ராணா, பிரபாஸ் எல்லாம் தெலுங்கு நடிகர்கள் ஆனால் சத்யராஜ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள். அதேபோல் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு நடிகர்கள். தமிழ் ரசிகர்களுக்காக சமுத்திரக்கனி ஹிந்தி ரசிகர்களுக்காக அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்தனர்.

Telugu to tamil remake

இப்படி பான் இந்தியா படம் உருவாவதால் அதை ரீமேக் செய்ய முடியாது, அந்த இயக்குனரும் இந்தியா முழுக்க பிரபலமடைவார். ஆனால் 80, 90 களில் எல்லாம் ரீமேக் மட்டும் தான். இங்கு ஹிட் அடிக்கும் படங்களை தெலுங்கு, ஹிந்தி சினிமா என அங்குள்ள நடிகர்களை வைத்து ரீமேக் செய்து கொள்வார்கள். அங்கு ஹிட் ஆகும் படங்களை நம் செய்து ஹிட் கொடுப்பார்கள். அப்படி நம் ஸ்டார் நடிகர்களுக்கு திருப்புமுனையாக இருண்டஹ் படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

   

நல்லவனுக்கு நல்லவன்

Nallavanukku nallavan
Dharmathmudu

சூப்பர்ஸ்டார் ரஜினியின் படங்கள் என்றாலே ஹிட் என்ற காலகட்டத்தில் வெளியான படம் தான் நல்லவனுக்கு நல்லவன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா நடிப்பில் 1984 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் தர்மாத்முடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். இதில் நடிகர் கிருஷ்ணம்ராஜூவும் ஜெயசுதாவும் நடித்திருப்பார்கள். கிருஷ்ணம்ராஜூ வேறு யாவும் அல்ல நடிகர் பிரபாஸின் சித்தப்பா தான் இவர்.

கில்லி

Okkadu and Ghilli

விஜய்யை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக உருவாக்கிய படமே கில்லி தான். விஜய்யை பிடிக்காதவர்களுக்கு கூட கில்லி பிடிக்கும், அந்தளவுக்கு அந்த படம் இருக்கும். விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடித்த இந்தப்படம் ஒக்கடு படத்தின் ரீமேக் ஆகும். மகேஷ் பாபு, பூமிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஒக்கடு தான் விஜய்க்கு கமர்ஷியல் அந்தஸ்தை பெற்று தந்த படம்.

சிறுத்தை

Siruthai and vikramarkudu

என்னதான் பருத்திவீரன் ஹிட் என்றாலும் கார்த்திக்கு கமர்ஷியல் ஹிட் என்றால் அது சிறுத்தை தான். அதனாலேயே இயக்குனர் சிவா, சிறுத்தை சிவா என அழைக்கப்படுகிறார். தெலுங்கில் நம் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ரவிதேஜா, அனுஷ்கா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விக்ரமார்குடு படத்தின் ரீமேக் தான் சிறுத்தை. தமிழில் சிறுத்தை வெற்றி இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

யாரடி நீ மோகினி

Aadavari mataluku arthale verule and yaaradi nee mohini

தனுஷ் கெரியரில் அவருக்கு ஒரு திருப்புமுனையை தந்த படம் யாரடி நீ மோகினி. வாசுவாக நம் மனதில் இன்று நீங்கா இடம் பிடித்திருக்கிறார் தனுஷ், இது ரகுவரனின் கடைசி படமும் கூட. இந்தப்படம் தெலுங்கில் வெங்கடேஷ், த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேறு படத்தின் ரீமேக். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒரிஜினலை விட ரீமேக்கே நன்றாக இருந்தது. வெங்கடேஷை விட தனுஷ் கனகசித்தமாக பொருந்தி இருந்தார்.

குட்டி

Aarya and kutty

தனுஷ் ரசிகர்களுக்கு பிடித்த படம் அவரின் குட்டி தான். ஸ்ரேயா பின்னாடியே சுற்றும் தனுஷை பார்க்க நமக்கே பாவமாக இருக்கும். இது தெலுங்கில் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆர்யா படத்தின் ரீமேக். இதுவும் தெலுங்கை விட தமிழில் தான் நன்றாக இருந்தது.

author avatar
Deepika