முன்னணி இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் டீன்ஸ் திரைப்படம் உருவானது. கடந்த 12-ஆம் தேதி டீன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 13 இளம் வயதினரை மையமாக வைத்து சாகசம் நிறைந்த திரில்லர் கதையாக டீன்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. அனைத்து இடத்திலும் லாஜிக்கை கரெக்டாக யோசித்து படமாக்கியுள்ளார் பார்த்திபன்.
இன்றைய தலைமுறை நகருக்கு அட்வைஸ் கொடுக்கும் விதமாக டீன்ஸ் திரைப்படம் அமைந்துள்ளது. டீன்ஸ் படத்தின் இரண்டாம் பாதியில் பார்த்திபன் குழந்தைகளை காப்பாற்றும் ஹீரோவாக மாறுகிறார். கடந்த முறை பார்த்திபன் ஒரு வித்தியாசமான முயற்சியாக இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
பார்த்திபனின் முயற்சிக்கு பாராட்டுகள் கிடைத்தது. ஆனால் படம் அந்தளவு வரவேற்பை வரவில்லை. டீம்ஸ் திரைப்படத்தின் இரண்டாவது பாதி மெதுவாக நகர்கிறதால் ரசிகர்கள் கடுப்பாகி விடுகின்றனர். முதல் நாளில் தமிழ்நாட்டில் வீண்ஸ் திரைப்படம் 7 லட்ச ரூபாய் வசூல் செய்தது. இந்தியன் 2 படம் மக்களிடையே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளதால் ரசிகர்கள் டீன்ஸ் திரைப்படத்தை பார்க்க ஆர்வமாக செல்கின்றனர்.
இதனால் டீன்ஸ் திரைப்படம் இரண்டாவது நாளில் 18 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. மூன்றாவது நாளில் டீன்ஸ் திரைப்படம் 26 லட்ச ரூபாய் வசூல் செய்தது. ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று நாட்களில் 51 லட்சம் ரூபாய் வசூல் செய்த நிலையில் இனி வரும் நாட்களில் படத்தில் வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.