தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான நேரடி நியமனம் மூலமாக பணி நியமனம் பெற்றவர்கள் பெரும் உற்சாகத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். ஆனால் அதனை சோகமாக்கும் விதமாக விழுப்புரத்தில் நடந்த ஒரு துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 2,715 ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்க விழுப்புரம், திருச்சி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த சில ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் காரில் வந்திருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டனர். விழுப்புரம் அய்யூர்அகரம் அருகே மேம்பால பணிகள் காரணமாக மாற்று வழியில் சென்ற கார் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்து கொண்டிருந்தால் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆசிரியை சிவரஞ்சனி மற்றும் சாகுல் அமீது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் ஆறு பேர் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பணி நியமனம் கிடைத்த வெறும் 10 நாட்களே ஆன நிலையில் இளம் ஆசிரியை சிவரஞ்சனியின் மரணம் கல்வி உலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…