“ஆஹா… என்ன ஒரு தூக்கம்…” இது ஸ்கூல் தானா…? அசந்து தூங்கிய ஆசிரியர்கள்…. படிப்பை விட்டுவிட்டு வீடு திரும்பிய மாணவர்கள்…. கொந்தளித்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 29, 2026

Spread the love

பீகார் பௌல் மாவட்டத்தில் உள்ள திரிவேணிகஞ்ச் பகுதியில் இயங்கி வரும் அரசுப் தொடக்கப் பள்ளியில், ஆசிரியர்கள் இருவர் வகுப்பறை பெஞ்சில் காலை நீட்டி நிம்மதியாகத் தூங்கும் காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில், ஆசிரியர்கள் பாடமெடுக்காமல் தூங்குவதைக் கண்ட மாணவர்கள் அதிர்ச்சியடைந்து தங்களது புத்தகப் பைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். இச்சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த பெற்றோர், அரசுப் பள்ளிகளின் இத்தகைய பொறுப்பற்ற தன்மையைக் கண்டித்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர்கள் தினேஷ் குமார் மண்டல் மற்றும் தேவேந்திர சர்தார் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். காணொளியின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு கூறிவரும் நிலையில், இச்சம்பவம் பீகார் மாநிலக் கல்வி முறையின் அவல நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.