மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது ஆபாசமான வீடியோக்களை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மாணவிகள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் அளித்தனர்.
அதில் ஆசிரியர் மாணவிகளை தவறான இடங்களில் தொட்டு பாலியல் தொந்தரவு அளிக்கிறார். அவருக்கு ஆதரவாக தலைமை ஆசிரியரும் உதவி தலைமை ஆசிரியரும் செயல்படுகிறார்கள். உதவி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்குள் பிரச்சனையை தூண்டி இரு கோஷ்டியாக பிரிக்கிறார். மாணவர்கள் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. பள்ளி வகுப்பறைகளில் பீடி சிகரெட் துண்டுகள் கிடைக்கிறது என பரபரப்பு புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது போலீசார் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…