“நான் ஹனிமூன் போகணும்” எனக்கு தேர்தல் டியூட்டி போடாதீங்க… கலெக்டர் ஆபீசில் மனு கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியை.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்!!

By Soundarya on பங்குனி 21, 2026

Spread the love

கேரளாவில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது தேனிலவு பயணத்திற்காகத் தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கும் வினோதச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எர்ணாகுளம் குழிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் அந்த இளம் ஆசிரியைக்கு, வரும் மார்ச் 29-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தை ஒட்டி தனது கணவருடன் லடாக் பகுதிக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்ட அவர், அதற்காகச் சுமார் 1.15 லட்சம் ரூபாய் செலவில் விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகளை முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளார்.

தேர்தல் காலத்தில் அரசு ஊழியர்களுக்குத் தேர்தல் பணி கட்டாயமாக்கப்படும் நிலையில், தனக்கு அந்தப் பணி ஒதுக்கப்பட்டுவிட்டால் பல மாத கனவுப் பயணமும், பெரும் தொகையும் வீணாகிவிடுமே என்ற அச்சம் அந்த ஆசிரியையைத் தொற்றியது. வழக்கமாகப் பணி நியமனம் வந்த பிறகு விடுப்பு கோருவதற்குப் பதிலாக, முன்னெச்சரிக்கையாகச் செயல்பட முடிவெடுத்த அவர், எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் உமேஷ் அவர்களை நேரில் சந்தித்து உருக்கமான மனு ஒன்றை அளித்தார். அதில் தனது திருமணப் பத்திரிகை மற்றும் லடாக் பயணத்திற்கான முன்பதிவு ஆதாரங்களை இணைத்து, தனது மகிழ்ச்சியைக் காக்க வேண்டுகோள் விடுத்தார்.

   

நிர்வாக ரீதியாகத் தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிப்பது சவாலான காரியம் என்றாலும், அந்த ஆசிரியையின் துணிச்சலையும் உண்மையான தேவையையும் பார்த்த ஆட்சியர், அதனைப் பரிசீலிப்பதாகப் புன்னகையுடன் உறுதியளித்துள்ளார். பொதுவாகத் தேர்தல் நேரத்தில் உடல்நலக் குறைவு போன்ற காரணங்களைக் கூறி ஊழியர்கள் தப்பிக்க முயலும் சூழலில், வாழ்வின் முக்கியத் தருணத்திற்காக உண்மையைச் சொல்லி முறையிட்ட அந்த ஆசிரியையின் அணுகுமுறை கேரளா முழுவதும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.