“வீட்டுக்கு வராதே!”… வரதட்சணைக் கொடுமையா?… தற்கொலைக்கு முன் நடந்த பகீர் உரையாடல்… சிக்கிய கணவர் குடும்பம்…!!

By Gayathri on ஆவணி 31, 2026

Spread the love

சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த 27 வயதான ஆசிரியை புவனேஸ்வரி, தனது தந்தை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது பெருமளவிலான நகைகள், விலையுயர்ந்த கார் மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்ட நிலையிலும், கணவர் குடும்பத்தினர் மேலும் வரதட்சணை கேட்டு புவனேஸ்வரியை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த குழந்தையின் முதல் பிறந்தநாளுக்குப் புவனேஸ்வரியின் பெற்றோர் குறைவான அளவிலேயே நகை அளித்ததால், தம்பதிக்குள் மீண்டும் தகராறு வெடித்துள்ளது. இந்நிலையில், திருவிழாவிற்காகப் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த அவரை, மீண்டும் தனது வீட்டிற்கு வர வேண்டாம் எனக் கணவர் தொலைபேசியில் கூறியதால் மனமுடைந்து அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தந்தையின் புகாரின் அடிப்படையில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்; மேலும், திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே இப்பெண் உயிரிழந்திருப்பதால் கிண்டி ஆர்.டி.ஓ. தரப்பில் வரதட்சணைக் கொடுமை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.