அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நார்த் போர்ட் உயர்நிலைப் பள்ளியில் இசைக்குழு பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த 51 வயது டேவிட் சோமர் என்ற ஆசிரியர், தனது பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். கோடைக்காலப் பயிற்சி முகாம் ஒன்றின் போது அந்த மாணவியின் அலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்ட அந்த ஆசிரியர், தொடக்கத்தில் சாதாரண முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். அதன் பின்னர், அவை ஆபாசமான பாலியல் ரீதியான உரையாடல்களாக மாறியதுடன், மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுப்புமாறும் வற்புறுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த மாணவியுடன் உடல்ரீதியான தவறான தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இக்கொடூர ஆசிரியரின் செயல்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் ரகசிய டைரியை அவரது பெற்றோர்கள் தற்செயலாகப் படித்ததன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த ஆசிரியரைக் கைது செய்துள்ளனர். மேலும், அந்த இசை ஆசிரியர் இதற்கு முன்பும் பல மாணவிகளிடம் ஆடை வடிவமைப்பு என்ற பெயரில் தவறான தொடுதல் மற்றும் அலைபேசி எண்களைக் கேட்டுத் தொந்தரவு கொடுத்ததாக அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலரும் புலனாய்வாளர்களிடம் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
