அலபாமாவிலிருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற 2 ஆம் வகுப்பு ஆசிரியை நிக்கோல் ஸ்டேபிள்ஸ், தனது 12 வயது மகனை பெல்ட்டால் அடிப்பதைக் காட்டும் ஒரு பயங்கரமான வீடியோ வெளியானதை அடுத்து கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த வீடியோவை அவரது மூத்த மகன் 24 வயதான ஜாக்சன் ஸ்டேபிள்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜாக்சன் கூறுகையில் தனது இளைய சகோதரர்களை தனது தாய் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்வதை தன்னால் அனுமதிக்க முடியாது என்று கூறினார். ஜாக்சன் அவர்களின் தாய் “தனது வாழ்நாள் முழுவதும் அவருக்கும் அவ்வாறே செய்தார்” என்றும் வெளிப்படுத்தினார். 18 வயதுக்குட்பட்ட குழந்தையை வேண்டுமென்றே துஷ்பிரயோகம் செய்ததாக ஸ்டேபிள்ஸ் மீது இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
📰A shocking case from Alabama: Nicole Staples, a 2nd-grade teacher who was even awarded Teacher of the Year last May, has been arrested and fired after a horrific video surfaced showing her allegedly beating her 12-year-old son with a belt.
The video was leaked by her older… pic.twitter.com/99zYpjknLF
— ShoneeKapoor (@ShoneeKapoor) November 25, 2025
