திமுகவுக்கு காங்கிரஸ் கொடுத்த ‘ஷாக்’..! ராகுல் காந்தியிடம் தவெக-வின் ரகசிய டீல்..? கோடம்பாக்கத்தில் இருந்து டெல்லி வரை அதிரும் அரசியல்…!!

By Soundarya on மாசி 10, 2026

Spread the love

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ‘ஆட்சியில் பங்கு’ ஆகிய விவகாரங்களில் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் இதில் பங்கேற்று, திமுகவுடனான தற்போதைய கூட்டணிச் சிக்கல்கள் குறித்து ராகுல் காந்தியிடம் விவரிக்க உள்ளனர். காங்கிரஸ் தரப்பில் கடந்த முறையை விடக் கூடுதலாக, சுமார் 41 முதல் 70 தொகுதிகள் வரை கோரப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2 ராஜ்யசபா இடங்கள் மற்றும் அமைச்சரவையில் இடம்பிடிக்கும் வகையில் ‘ஆட்சியில் பங்கு’ எனும் கோரிக்கையை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், திமுக தனது பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.

திமுகவின் இந்தத் தாமதத்திற்கு நடுவே, நடிகர் விஜய்யின் தவெக கட்சி காங்கிரஸிற்குப் பெரும் ‘ஆஃபர்’ ஒன்றை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக தரப்பிலிருந்து காங்கிரஸிற்கு சுமார் 60 முதல் 70 தொகுதிகள் வரை வழங்கத் தயாராக இருப்பதாகவும், முக்கியமாக ஆட்சியில் பங்கு வழங்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவை ‘இயற்கையான கூட்டணி’ என்று அக்கட்சியினர் குறிப்பிட்டு வரும் நிலையில், காங்கிரஸின் இளைய தலைமுறையினர் சிலர் இந்த மாற்றுக் கூட்டணியை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில், ராகுல் காந்தி திமுக உடனான தற்போதைய நிலையைத் தொடர்வாரா அல்லது காங்கிரஸிற்கு ஆட்சி அதிகாரத்தை உறுதி செய்யும் தவெக பக்கம் தனது நிலைப்பாட்டை மாற்றுவாரா என்பது இன்றைய ஆலோசனையின் முடிவிலேயே தெரியவரும்.