இந்த வருடம் டாடா குழும்பத்தைச் சேர்ந்த ஜூடியோ 47 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அதேபோல ஒரே மாதத்தில் அதனுடைய பங்கு விலையானது சுமார் 19 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது. டாடாவிற்கு சொந்தமான ட்ரெண்ட் 2024 ஆம் வருடம் குறிப்பிடத்தக்க 133 சதவீதம் வருமானத்தோடு நிஃப்டியின் சிறந்த செயல்கள் கொண்ட பங்காக செயல்பட்டு வந்தது.

ஆனால் 2025 ஆம் ஆண்டில் அதற்கு தலைகீழாக மாறி உள்ளது. அதாவது இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது ஒரே மாதத்தில் 19 சதவீதம் குறைந்திருக்கிறது. சந்தை மதிப்பில் சுமார் 47 ஆயிரம் கோடியை இழந்திருக்கிறது. இதன் பங்கு விலை அக்டோபர் மாத உச்சவரம்ப்பு உடன் ஒப்பிடுகையில் இப்போது 31 சதவீதம் குறைந்துள்ளது. நான்காம் காலாண்டு முதல் தொடர்ந்து 50% வருவாய் வளர்ச்சியை பதிவு செய்த ட்ரெண்ட், Q4 FY24 வருடத்திற்கு வருடம் 40% வருவாய் வளர்ச்சி பதிவு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில வருடங்களிலும் நுகர்வோர் உணர்வு, பருவநிலை மற்றும் 25 கடைகள் மூடல் ஆகிவை இதற்கு காரணம் என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள். வெஸ்ட் சைட் இரண்டு கடைகளுடைய நிகர சரிவை சந்தித்ததாக ஜெஃப்ரிஸ் குறிப்பிட்டார். இரண்டாவது தொடர்ச்சியான காலண்டில் 5 நகரங்களை விட்டும் வெளியேறி உள்ளார்கள். ட்ரெண்ட் அதன் Q3 FY25 முடிவுகளை பிப்ரவரி 6ஆம் தேதி அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது.

இந்நிலையில் இதற்கு முன்பாக கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈகிவிட்டிஸ் பங்குகளை விற்கலாம் என்று கூறி இலக்குகளை 5850 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. நுவாமா வருடத்திற்கு 40% வருவாய் வளர்ச்சி எதிர் பார்க்கும். அதே வேளையில் மொத்த வரம்புகளில் 50 சதவீத புள்ளிகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தொடர் மந்தமான நிதி நிலை அறிக்கைகள், பங்கு விலை சரிவுகள் போன்றவற்றின் காரணமாகவே Zudio மற்றும் பெஸ்ட் சைட் ஸ்டோர்கள் ஸ்டோர்கள் மூடப்பட்டு வருகின்றன.
