தமிழகத்தில் மொத்தமாக 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதனை அரசு எடுத்து நடத்திவரும் நிலையில் ஒரு நாளைக்கு 100 கோடிக்கு அளவிலான மது விற்பனை நடைபெறுகிறது. அதிலும் வார இறுதி நாட்களில் 170 கோடி முதல் 150 கோடி வரை மது விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்படாத அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு மட்டும் 790 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் துறையாக தமிழகத்தில் டாஸ்மாக் விளங்குகிறது.
இந்நிலையில் மழை, வெள்ளம், புயல் மட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் மற்ற அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதை கிடையாது. எனவே தமிழக அரசு சார்பில் வருடத்திற்கு குறிப்பிட்ட 8 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையாகும். அதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது.
அதாவது ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 திங்கட்கிழமை குடியரசு தினம், பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை வடலூர் ராமலிங்கம் நினைவு தினம், ஏப்ரல் 31 செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, மே 1 வெள்ளிக்கிழமை தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சனிக்கிழமை சுதந்திர தினம், செப்டம்பர் 26 புதன்கிழமை மிலாது நபி, அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 8 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…