குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…. தமிழக டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம்… அரசு திடீர் முடிவு…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

தமிழகத்தில் பருவமழை முடியும் வரை டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 9:00 மணிக்கு மூடுவதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்போது மதியம் 12 மணி முதல் இரவு 10:00 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. மழை நேரத்தில் வீடுகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதால் கடை மூடும் நேரத்தை குறைக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மழையின் சூழலுக்கு ஏற்றவாறு கடைகளை முன்னதாக மூட சில மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்த செய்தி குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது