டோட்டலா மாறும் டாஸ்மாக்…. செப்டம்பர் 1-ம் தேதி முதல் காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. தமிழக அரசின் புதிய அதிரடி முடிவு….!

Spread the love

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் நாள்தோறும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. 11 நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்களும், 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளும் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க சமீபத்தில் ஆன்லைன் ஆர்டர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கடைகளில் குறிப்பிட்ட பிராண்டுகள் போதிய இருப்பில் இல்லாததால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத வேறு பிராண்டுகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு வந்தனர்.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘டிஜிட்டல் மற்றும் தானியங்கி தேவைப் பட்டியல்’ (Digital Indent System) முறையை டாஸ்மாக் நிர்வாகம் நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த புதிய முறையின் கீழ், டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பிரத்யேக கைக்கருவிகள் (POS/Handheld devices) மூலம் ஒவ்வொரு கடையின் முந்தைய விற்பனை விவரங்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையில், அந்தந்த கடைக்குத் தேவையான பிராண்டுகள் மற்றும் அவற்றின் அளவுகள் தானாகவே கணக்கிடப்பட்டு திரையில் தோன்றும்.

மேலும், உள்ளூர் விற்பனைத் தேவையைச் சிறப்பாகக் கையாளுவதற்காக, கணினி பரிந்துரைக்கும் அளவை விட 20 சதவீதம் வரை கூடுதல் சரக்குகளைக் கோரும் அதிகாரம் கடை மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி ஊழியர்கள் கோரிக்கை பட்டியலை மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு நேரில் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் ஆர்டர் உடனடியாக உறுதி செய்யப்படும்.

இவ்வாறு உறுதி செய்யப்படும் ஆர்டர்கள் நேரடியாக உள்ளூர் டாஸ்மாக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு, கடைகளுக்குத் தேவையான சரக்குகள் தாமதமின்றி விநியோகிக்கப்படும். இந்த தானியங்கிப் பங்கீட்டு முறையின் மூலம் எந்தெந்த பகுதிகளில் எந்த பிராண்டுகள் அதிகம் விற்பனையாகிறதோ, அவை தடையின்றிப் போதிய இருப்பில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் “கேட்ட பிராண்ட் கிடைக்கவில்லை” என்ற மதுப்பிரியர்களின் நீண்ட நாள் குறை நிவர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

5 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

5 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

5 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

5 மணத்தியாலங்கள் ago