குஷியோ குஷி… தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி… மது பிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!

By Swetha on ஆடி 29, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இனி நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே மதுபானங்கள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பழனி பாரதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், எம்.ஆர்.பி விலையை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் அரசு எடுத்துள்ள இந்த முடிவை டாஸ்மாக் பணியாளர் சங்கம் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக, சில டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ 10 வரை வசூலிக்கப்படுவதாக மதுப்பிரியர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். தற்போதைய இந்த புதிய அறிவிப்பின் மூலம், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பான வாடிக்கையாளர்களின் நீண்ட கால குமுறலுக்கு நிரந்தர முடிவு கட்டப்பட்டுள்ளது.