FLASH: பாமகவின் முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்..!!

By Soundarya on சித்திரை 27, 2026

Spread the love

தாரமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ. கண்ணையன் அவர்களின் மறைவுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், வன்னியர் சங்கப் போராட்டக் காலங்கள் தொட்டு கட்சியின் வளர்ச்சி வரை கண்ணையன் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பணிகளை உருக்கமாக நினைவுகூர்ந்துள்ளார். குறிப்பாக, 2006-ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய திறம்படச் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கடந்து, பெ. கண்ணையன் தங்களது குடும்பத்தில் ஒருவராகவே திகழ்ந்தவர் என்று குறிப்பிட்ட அன்புமணி ராமதாஸ், அவரது மறைவு தமக்கு ஈடு செய்ய முடியாத தனிப்பட்ட இழப்பு என்று வேதனை தெரிவித்துள்ளார். மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உழைத்த ஒரு சிறந்த ஆளுமையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாமக தொண்டர்களுக்கும் தனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் அந்தப் பதிவில் பதிவிட்டுள்ளார்.