பிரபல நடிகையான தன்யா ரவிச்சந்திரன் மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். நடிகர் ரவிச்சந்திரன் காதலிக்க நேரமில்லை, அதே கண்கள் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.

#image_title
கடந்த 2017-ஆம் ஆண்டு ரிலீசான பலே வெள்ளையத் தேவா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தன்யா திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து நெஞ்சுக்குள் நீதி, மாயோன், அகிலன், ரசவாதி உள்ளிட்ட திரைப்படங்களில் தன்யா நடித்தார். இந்த படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

#image_title
பேப்பர் ராக்கெட் என்ற இணைய தொடரிலும் தன்யா நடித்துள்ளார். முன்னணி நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து கருப்பன் திரைப்படத்தில் தன்யா நடித்துள்ளார். அந்த படத்தில் தன்யாவின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .லட்சணமான முகம், ஹோம்லி கதாபாத்திரம், அசத்தலான நடிப்பு என திரையில் ரசிகர்களை கவர்ந்தார்.

#image_title
துப்பறிவாளன் படத்தில் கதாநாயகியாக நடித்த தன்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு கைநழுவி போனது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் தன்யா பிசியாக நடித்து வருகிறார். இப்போது தன்யாவுக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே வருகிறது.

#image_title
இப்போது ஒரு சில நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தன்யா தேர்ந்தெடுத்து நடிக்கிறார். படம் வாய்ப்புகள் கிடைக்காததால் ஏராளமான நடிகைகள் கவர்ச்சியில் இறங்கிவிட்டனர். அந்த வகையில் தன்யாவும் வெள்ளை நிற உடைய ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title