ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் லாபம் பார்த்த தங்கலான்.. அப்போ சூர்யா காட்டில் அடை மழை தான் போலயே..!!

By admin on ஆவணி 13, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் சேது திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். விண்ணுக்கும் மண்ணுக்கும், தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், அந்நியன், ராவணன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் விக்ரம் நடித்துள்ளார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற 15-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது.

   

தங்கலான் திரைப்படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், இங்கிலாந்து நடிகர் டானியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததால் இப்போது விக்ரம் உள்ளிட்ட ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தங்கலான் படத்தின் தமிழ்நாட்டு உரிமம் எவ்வளவு கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் ரிலீஸ் ஆனது.

   

 

இந்த படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமை 17 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தங்கலான் படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் படம் 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தங்களன் திரைப்படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும் ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் மற்றும் ஜியோ ஸ்டுடியோ இணைந்து தங்கலான் திரைப்படத்தை தயாரிக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முன்னணி நடிகரான சூர்யாவும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோவின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக செயல்படுகிறாராம். சூர்யா ஞானவேல் ராஜாவின் நெருங்கிய உறவினரும் ஆவார். தங்கலான் படம் ரிலீசுக்கு முன்னரே பல கோடி ரூபாய்க்கு லாபம் பார்த்ததால் சூர்யா அண்ட் கோ மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். இது மட்டுமில்லாமல் தங்களான் படம் ஃப்ரீ புக்கிங் கிட்டத்தட்ட 1.8 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.