தங்கலான் பட ரிலீசுக்கு புதிய சிக்கல்.. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!!

By Nanthini on ஆவணி 12, 2024

Spread the love

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது.

   

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது தங்கலான் திரைப்படத்திற்கு புதிய சிக்கல் வந்துள்ளது. அதாவது தங்கலான் படத்தை வெளியிடும் முன்பு ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கங்குவா படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

   

 

அர்ஜுன் லால் சுந்தர தாஸ் என்ற நபரிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் பணம் டெபாசிட் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டுமென்று உத்தரவிட்ட நீதிமன்றம்,  வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.