தற்போது டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் வரவேற்பை விட விவாத நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி தற்போது கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதற்குப் போட்டியாக மற்றொரு டிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
அதன்படி நேற்று தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை என்ற தலைப்பில் சுவாரஸ்யமான விவாதம் ஒன்று நடந்தது. அதில் பங்கேற்ற கண்பார்வையற்ற தம்பதியினர் தங்களுடைய காதல் கதை குறித்து அரங்கத்தில் பகிர்ந்து கொண்ட வியக்க வைக்கும் சுவாரசியமான விஷயங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பலருடைய பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அந்த காட்சியை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
