தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. முக்கிய கட்சிகளுடன் சேர்ந்து நடிகர் விஜய் அரசியல் வருகை மிகுந்த கவனத்தை எடுத்துள்ளது. அதிமுக மற்றும் திமுக ஆகியவை கூட்டணி பேச்சு வார்த்தைகள் மற்றும் தொகுதி பங்கீடு என களத்தில் இறங்கி பணியாற்றி வரும் சூழலில் விஜயின் அரசியல் பங்களிப்பு இந்த தேர்தலை மிகப்பெரிய போட்டியாக மாற்றும் என தெரிகிறது. சமீபத்தில் கரூரில் நிகழ்ந்த விவகாரம் விஜய்க்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்து இருந்தாலும் அதனை சமாளிக்க தமிழக வெற்றி கழகத்தின் நடவடிக்கைகள் வேகம் அடைந்துள்ளது.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் இருந்த விஜய் மீண்டும் அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு தயாராகியுள்ளார். அதற்கான நேர்மையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. மக்கள் சந்திப்பு மற்றும் ரோடு சோக்களை தவிர்த்து பொதுக்கூட்டங்கள் மூலமாக மக்களிடம் செல்வது என விஜய் புதிய திட்டத்தை வகுத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக மாலை 3 மணி முதல் 5 மணி வரை நிகழ்ச்சிகளை நடத்தி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முடிவாக 2026 தேர்தலை முன்னிட்டு வெளிவரும் இந்த புதிய அரசியல் அணுகுமுறை விஜயின் அரசியல் பயணத்தில் அதிரடி திருப்பமாக மாறும் என தெரிகிறது. இதனால் விஜயின் அடுத்த கட்ட நகர்வு என்பது தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
