ரேஷன் கார்டுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு… யார் யாருக்கு கிடைக்கும்?… வெளியான முக்கிய தகவல்…!

By Nanthini on ஐப்பசி 9, 2025

Spread the love

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கின்றது. அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இரண்டு மட்டங்களில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு போட்டியாக தற்போது தமிழக அரசு ரேஷன் அட்டைகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் வேஷ்டி சேலை அரசு வழங்கியிருந்தது. ஆனால் சில வருடங்களாக வழங்கி வந்த ரொக்கம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 5000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 10,000 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிதியை திரட்டுமாறு நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

   

பொங்கல் பரிசு தொகுப்பான பச்சரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்களுடன் வேஷ்டி சேலையும், ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்க திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு கிடைக்கும். அடையாளத்திற்காக ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.