தமிழகத்தில் மருத்துவ சேவைகளின் தரம் குறித்த கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தபோது பத்திரிக்கையாளர் ஒருவர், மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இல்லை என்று கேள்வி எழுப்பினார்.
உடனே அமைச்சர், அது முற்றிலும் தவறு, தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று பதில் அளித்தார். பிறகு குறிப்பிட்ட உப்பு மாத்திரை பற்றி கேள்வி எழுப்பிய போது, அருகில் நின்று கொண்டிருந்த டீன் அவர்களிடம் அமைச்சர் அந்த மருந்து பற்றி விசாரித்தார். அப்போது டீன், எல்லாம் சரியாக இருக்கிறது என்று அமைச்சரிடம் கூறியதுடன் பத்திரிக்கையாளர்களை நோக்கி நாக்கை நீட்டி அதை சொல்லாதே என்று சைகை செய்தார். அந்த காட்சியை கேமராவில் பதிவான நிலையில் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியதும் பலருடைய விமர்சனங்களையும் பெற்றுள்ளது. பத்திரிக்கையாளர்களுக்கே மிரட்டல் சைகை வந்தால் சாதாரண மக்கள் தங்கள் குறைகளை எப்படி தெரிவிப்பார்கள் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மருந்து இல்லை என்ற உண்மையை மறைக்க முயலும் டீன் அதிகாரியில் நடத்தை அரசாங்கத்தின் வெளிப்படை தன்மைக்கு கேள்விக்குறி என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…
தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…
பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…
சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…