“நாங்க சாதம், மாம்பழம் தருவோம்” அவங்க ஓட்ட பானையை தருவாங்க… சின்னங்களை வைத்து ‘மெனு’ போட்ட தமிழிசை..!!

By Soundarya on மாசி 7, 2026

Spread the love

சென்னையில் இன்று (பிப்.7) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக தலைமையிலான கூட்டணியை மிகக் கடுமையான உருவகங்கள் மூலம் விமர்சித்தார். “திமுகவின் சூரிய ஒளி எந்தக் காலத்திலும் மக்களுக்குப் பயன் தராது” என்று குறிப்பிட்ட அவர், பாஜக மற்றும் அதன் கூட்டணி பலத்தை விளக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் சின்னங்களை வைத்து சுவாரஸ்யமாகப் பேசினார்.

தமிழிசை பேசுகையில், “நாங்கள் இரட்டை இலை (அதிமுக) போட்டு, குக்கரில் (அமமுக) சாதம் வைத்து, சைக்கிளில் (தமாகா) சென்று மக்களுக்குக் கொடுப்போம்; மக்களின் முகம் தாமரை (பாஜக) போல் மலர்வதைப் பார்ப்போம்” என்றார். மேலும், அந்தச் சாதத்தோடு மாம்பழமும் (பாமக) வைத்துக் கொடுப்போம் எனக் கூறிய அவர், திமுக கூட்டணியினர் வெறும் கைகளையும் (காங்கிரஸ்), ஓட்டை பானையையும் (விசிக) மட்டுமே நம்பி இருப்பதாக எள்ளி நகையாடினார்.