“விஜய் நிம்மதியா அரசியல் செய்யணும்னா இதுதான் வழி”… திமுகவால் ஆபத்து..? பரபரப்பை கிளப்பிய தமிழிசை..!!

By Soundarya on தை 26, 2026

Spread the love

2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிக்கு வந்தால் நடிகர் விஜய் நிம்மதியாக அரசியல் செய்ய முடியும் என்றும், ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘கரூர் சம்பவத்தை’ அவர் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்துள்ளார். திரையுலகிலிருந்து வந்த உடனேயே முதலமைச்சர் ஆவது என்பது கடினமான காரியம் என்று குறிப்பிட்ட அவர், விஜய் வெற்றி பெறக்கூடிய வலுவான கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய் ஒரு சிறந்த தலைவர் என்று பாராட்டியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே தமிழிசையின் இந்த விமர்சனம் பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணிக் கணக்குகள் குறித்துத் தமிழிசை இவ்வளவு வெளிப்படையாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.