“சீமானின் 8% ரகசியத்தை உடைத்த சி.டி.ஆர். நிர்மல் குமார்”… விஜய் இல்லைனா சீமானுக்கு வாக்கு இல்லையா… தவெக வெளியிட்ட அதிரடித் தகவல்..!!!

By Rajeshwari on சித்திரை 8, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச்செயலாளரான சி.டி.ஆர். நிர்மல் குமார், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற 8 சதவீத வாக்கு வங்கிக்கு பின்னால் தவெக தொண்டர்களின் ஆதரவு இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அப்போது விஜய் இன்னும் அரசியல் கட்சி தொடங்காத நிலையில், சீமான் அவரை தனது தம்பியாகக் குறிப்பிட்டு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததால், தவெக தொண்டர்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கப் பிரச்சாரம் செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மறைமுக ஆதரவே சீமானின் வாக்கு சதவீதம் உயரக் காரணமாக அமைந்ததாகவும், தற்போது நிலைமை மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு சீமான் ஒரு பொறுப்பான தலைவரைப் போலச் செயல்படாமல் ஒரு ‘யூடியூபர்’ போலச் செயல்பட்டு வருவதாக நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

   

மேலும் யாருக்கும் அடிபணிய மாட்டேன் என்று விஜய் அறிவித்த பிறகு சீமான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தற்போது அரசியல் காமெடி செய்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கடந்த காலங்களில் சீமானுக்குக் கிடைத்த வாக்குகளும், மாற்று அரசியலை விரும்பும் மக்களின் வாக்குகளும் முழுமையாக விஜய்க்கே கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.